சார்பு உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு

சார்பு உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் சார்பு உதவி ஆய்வாளர்கள்கான உடற்தகுதி தேர்வை நேர்மையான முறையில் நடத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 750 பணியிடங்களுக்கான சார்பு உதவி ஆய்வாளர் (ஆண்/பெண்) பதவிக்கான எழுத்துதேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் (பெண்கள் மட்டும்) திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த (07.11.23 & 08.11.23) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.

இதில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பங்குபெற முடியாத நபர்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சம்மந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி உள்ள நபர்களுக்கும் நேற்றும், இன்றும், (29.11.23 & 30.11.23 ) நடைபெறுகிறது. திருச்சி மாநகரில் பொது போட்டியாளர்கள் 35 நபர்கள், காவல்துறை ஒதுக்கீட்டில் 66 நபர்கள் என மொத்தம் 101 நபர்கள் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் பொது போட்டியாளர்கள் 33 நபர்களும், காவல்துறை ஒதுக்கீட்டில் 53 நபர்கள் என மொத்தம் 86 நபர்கள் கலந்து கொண்டார்கள். உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களிடம் நேற்று (29.11.23)-ந் தேதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம் சரிபார்த்தல், பின்னர் 1500 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம் என மொத்தம் 3 நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இன்று (30.11.2023)-ந் தேதி நீளம் தாண்டுதல், பந்து எறிதல், 100 மீட்டர் / 200 மீட்டர் ஓட்டம் என 3 நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

மேற்கண்ட உடற்தகுதி தேர்வில் போட்டியாளர்களின் உயரம் சரிபார்தல், 1500 மீட்டர் ஒட்டம் போன்ற நிகழ்வினை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வின்போது திருச்சி காவல்துறை துணை தலைவர் P.பகலவன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், தலைமையிடம் S.ரவிசந்திரன், திருச்சி மாநகர கூடுதல் காவல் துணை ஆணையர் M.விக்னேஷ்வரன் மற்றும் திருச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், தலைமையிடம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision