திருச்சி 43வது வார்டை புறக்கணிக்கும் கவுன்சிலர்-மாநகராட்சி-மின்சார வாரியம் புலம்பும் பொதுமக்கள்
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-த்திற்க்குட்பட்ட 43 வது வார்டு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோயில் அருகில் மின்சார உயர் மீது தென்னை மரம் மட்டை சாய்ந்து உள்ளது. இருக்கிறது பலமுறை மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்து எந்த பயனும் இல்லை.
குறிப்பாக அந்த வார்டு கவுன்சிலர் செந்தில் வீட்டின் பின்புறம் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காலிமனையில் இருக்கும் இந்த தென்னை மரக்கிளைகள் தான். மின் கம்பிகள் மீது சாய்ந்திருக்கும் தென்னை மரக்கிளைகளை அகற்ற அந்த வார்டு கவுன்சிலர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் மட்டுமே அனைத்து துறைகளும் விரைந்து கொண்டு வருவார்கள். ஆனால் புகார் தெரிவித்தாரல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாநகராட்சி இது புதிய வார்டு 43 பழைய வார்டு 29 மற்றும் 61 வார்டுகளை சேர்த்தது. பொறியாளர் தொடர்பு கொண்டால் இது என்னோட பகுதி அல்ல என்று புறக்கணிக்கிறார்.
இதேபோல் மாநகராட்சி மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தால் அவர்கள் தங்களுடைய பொறுப்பை தட்டிக் கழித்து எங்களுடைய வார்டு பகுதியை இல்லை என குறிப்பிடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO