காந்தி மார்க்கெட்டில் தரக்கடை , சில்லறை வியாபாரத்திற்கு நாளை முதல் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் 348 காய்கறி கடைகள், 79 பூக்கடைகள், 108 மளிகை கடைகள், 28 பழக்கடைகள், 62 இறைச்சி கடைகள், 62 மீன் கடைகள், 65 ஸ்டால்கள் மற்றும் தரை கடைகள் என மொத்தம் 1320 கடைகள் இயங்கி வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் மூடப்பட்டது அதன்பின் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் காரணமாக அரசு உத்தரவுப்படி காந்தி மார்க்கெட்டில் தரைக்கடை மற்றும் சில்லறை மற்றும் இதர கடை வியாபாரத்திற்கு நாளை 11.04.2021 முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாறாக சில்லரை வியாபாரம் உழவர் சந்தைகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் விற்பனை செய்து கொள்ளலாம் என்றும், மொத்த வியாபாரம் மட்டுமே நடப்பதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை வீரியம் ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் குறைந்தால் மீண்டும் தரை வியாபாரத்திற்கு அனுமதிக்கப்படலாம்.
இந்நிலையில் நேற்று காந்தி மார்க்கெட் வியாபாரிகளுடன் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் வியாபாரிகள் தரப்பில் காந்தி மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், பகல் நேரங்களில் சில்லறை வியாபாரமும் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த காந்தி மார்க்கெட்டில் தரைக்கடை மற்றும் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய