சாரநாதன் பொறியியல் கல்லூரியில் "Patent to product" சிறப்பு நிகழ்ச்சி

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் "Patent to product" சிறப்பு நிகழ்ச்சி

 சாநாதன் பொறியியல் கல்லூரியின் அறிவுசார் செர்த்து மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரிவு (PEDC) திருச்சிராப்பள்ளியில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தின் இயந்திர பொறியியல் துறையின் கருத்தரங்கு மண்டபத்தில் "Patent to product " என்ற நிகழ்வை நடத்தியது.

 சாரநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி.வளவன் வரவேற்றார். தலைமை விருந்தினரான எஸ்.சிவபாரதி, இயக்குநர், (சிவா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ், நாகப்பட்டினம்) தனது தொழிற்சாலை வளாகத்தில் நீர் கசிவு தடுப்பானைவணிகப் பொருளாக மாற்றுவதற்கான காப்புரிமை ஆவணங்களைப் பெற்றார். 

எஸ் திவாகர், ஃபேக்டம் சட்ட வழக்கறிஞர்கள், ஆழ்வார்பேட்டை சென்னை, அறிவுசார் சொத்துரிமையின் பல்வேறு சட்ட அம்சங்களைப் பற்றி சுருக்கமான முன்னுரை வழங்கினார். 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் ஆர்.நடராஜன் (ஐ.பி.இ.டி.சி யின் ஒருங்கிணைப்பாளர்) பாராட்டுரையாற்றி காப்புரிமை தாக்கல் செய்தல், தயாரிப்பு மாற்றம் மற்றும் அதன் ஆழமான நுண்ணறிவுகள் குறித்து பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO