ஜப்திக்கு சென்ற துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் - சிகிச்சைக்கு அனுமதி
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு கனரா வங்கியில் 22கோடி கடன் வாங்கிவிட்டு 2019ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி, காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான 44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்களுடன் ஜப்தி செய்ய சென்றபோது, அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர், கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் அரசு தலைமை மருத்துவமனையில் இரவில் குவிந்துள்ளனர்.
அதேநேரம் ஆட்சியர் உத்தரவின் பெயரில் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட முயன்றவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்கள் தற்பொழுது மிகுந்த மன வேதனையிலும் கோபத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision