திருச்சியில் ஜே.பி.,நட்டாவின் ரோடு ஷோ

திருச்சியில் ஜே.பி.,நட்டாவின் ரோடு ஷோ

திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு ஏதும் அளிக்காமல் தோற்கடிப்போம் வீட்டுக்கு அனுப்புவோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் - திருச்சி ரோடு ஷோ நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பேச்சு

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசிய தலைவர் ஜே பி நட்டா தலைமையில் திருச்சி சாலை ரோட்டில் இருந்து உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை ரோடு ஷோ நிகழ்ச்சி இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்...

ரோடு ஷோ சாலை ரோடு முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை நடைபெறும் சாலை முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது..

மாநகர காவல் துறையின் சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர்.பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வருகை தந்த பின் ரோட் ஷோ வண்டியில் ஏறியபடி சாலையின் இரு புறங்களிலும் நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்துக் கொண்டே வந்தார்.

அப்போது ஜேபி நட்டாவிற்கு தொண்டர்கள் பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்..

சாலை ரோட்டில் புறப்பட்ட ரோடு ஷோ நாச்சியார் கோயில் பேருந்து நிறுத்தம் சந்திப்பு அருகே நிறைவு பெற்றது.

ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தனர் அதனை அடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு சென்று நீதிமன்ற மூலம் அனுமதி பெற்று மாற்று பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சி ஆனது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பேசுகையில்..மத்திய அரசுக்கு ஆதரவளிப்பீர்களா...

குக்கர் சின்னத்திற்கு வாக்களிப்பீர்களா...

திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு ஏதும் அளிக்காமல் தோற்கடிப்போம் வீட்டுக்கு அனுப்புவோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என இரண்டே நிமிடம் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு வண்டியில் இருந்து இறங்கி புறப்பட்டுச் சென்றார்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision