திருச்சி சிறப்பு முகாமில் உடலினை கிழித்து போராட்டத்தால் பதற்றம்

திருச்சி சிறப்பு முகாமில் உடலினை கிழித்து போராட்டத்தால் பதற்றம்

திருச்சி சிறப்பு முகாமில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் உண்ணாவிரம் இருந்த அகதிகள் இன்று மீண்டும் தமது உடலினை கிழித்து கொண்டு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர்ந்து தமிழகத்தினுள் அடைக்கலம் புகுந்த ஈழ தமிழர்களை ஒருபாலார் சாதாரண அகதிகள் முகாமிலும், இன்னொரு பாலார் திருச்சி சிறப்பு முகாமிலுமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தமது உறவுகளுடன் தம்மை சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு குறித்த போராட்டக்காரர்கள் கடந்த மாதம் உண்ணாநிலை போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த மாதம் போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

மேலும் நிலுவையில் உள்ள அவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து தாயகம் செல்ல விரும்புவோரை தாயகம் அனுப்புவதாகவும் ஏனையவர்களுக்கு சாதாரண முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர் 

காலம் கடந்தும் இன்னமும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தே குறித்த உறவுகள் இன்றைய தினம் தமது உடல்களை கிழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் றமணன் (43) என்பவர் வயிற்றினை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். படுகாயமுற்ற அவரை சிறை காவலர்கள் விரைந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தால் சிறப்பு முகாமில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn