கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்.

கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்தஉப்பிலியபுரம் அருகே சோபணபுரம் மற்றும் கொப்பம்பட்டி கிராமத்தில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் அருகே - சோபணபுரம் மற்றும் கொப்பம்பட்டி ஆகிய கிராமத்தில் கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் இன்று நடத்தினர். இந்த முகாமில் கிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், பருவ கால பயிர்களின் வரைபடம், மற்றும் நகர ஆற்றல் வரைபடம் ஆகியவற்றை வரைந்து அவர்களுக்கு விளக்கி கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி முசிறி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் துர்கேஷ், கோகுல்பிரகாசம், கௌதமன்,குணாலன்,இஷாக்,ஜெயராகவன்,ஜெயந்தராஜன், கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision