NHRD திருச்சி பிரிவின் சார்பில் பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

NHRD திருச்சி பிரிவின் சார்பில் பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

தேசிய மனிதவள மேம்பாட்டு துறை திருச்சி பிரிவு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக பெண்களை சிறப்பிக்கும் வகையில் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தன்னுடைய வாழ்விலும் சமூகத்திலும் உயர்ந்த பெண்களை அங்கீகரிக்கும் வவையில் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதவள மேம்பாட்டு துறை இந்த கொரானா காலகட்டத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை இந்த சமூகத்திற்காக வழங்கியது.இந்த கொரானா காலகட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் அதே நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் இந்த சமூகத்தோடு இணைந்து செயல்பட்ட சிறந்த மனித வள மேம்பாடு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த விருது சென்று சேர வேண்டும் வேண்டும்.

மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள், தொழில்முனைவோர்கள், சமூக சேவையாளர்கள்போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் "women at work "'பெண் சாதனையாளர்கள் விருது 2022' விருதுகள் 12சாதனை மங்கைகளுக்கு வழங்கி உள்ளனர். மார்ச் 12 திருச்சி ரம்யா ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது

விருதுகள் என்பது அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் அப்படி மிகச் சிறந்த திறமையானவர்கள் மிகச்சிறந்த பணியாளர்களுக்கும் இது சென்று சேர வேண்டும் என்று மிகச் சிறந்த வல்லுநர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிர்லா சன்லைப் CHRO செல்வம்ராஜ், ஐஐஎம் பேராசிரியர்கள் போன்றோர் அத்தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 252 நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பித்தனர். இதில் 12நபர்கள் விருதுக்கு தேர்வாகினர். தேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை திருச்சி பிரிவில் இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக நடைபெறும் முதல் நிகழ்ச்சி ஆகும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO