மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 240 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 77 ஆயிரத்து 897 பெண் வாக்காளர்களும், 58 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 17 லட்சத்து 20 ஆயிரத்து 195 வாக்காளர்கள் வாக்களித்தனர். திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த பதிவான வாக்குகள் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இமயம் கல்லூரி என மொத்தம் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமன திவ்யதர்ஷினி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி முழுவதும் வெப் கேமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr