ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய வட்டாட்சியர்

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய வட்டாட்சியர்

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. கிலோ பச்சரிசிக்கு 35.20 ரூபாய், சர்க்கரைக்கு 42.84 ரூபாய், கரும்புக்கு 35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தம் 249.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பச்சரிசி, சர்க்கரையை தமிழக நுகர்பொருள் வாணிப கழகமும், கரும்பை கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்தன. அவை, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, நேரம் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய 'டோக்கன்'கள், வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை லால்குடி வட்டாச்சியர் முருகன் தொடங்கி வைத்தார். முன்னதாக ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு தயாராக இருந்த பச்சரிசி, சேலை, வேட்டி உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் லால்குடி மண்டல துணை வட்டாட்சியர் வனஜா, வாளாடி வருவாய் அலுவலர் வெங்கடேஷன் மற்றும் ரேஷன் கடை ஊழியர் நித்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision