சிறை காவலரை ஜட்டியுடன் வைத்து காவல் நிலையத்தில் சித்ரவதை

சிறை காவலரை ஜட்டியுடன் வைத்து காவல் நிலையத்தில் சித்ரவதை

லால்குடி காவல் நிலையம் முன்பு செம்பரை கிராமத்தைச் சேர்ந்த சிறை காவலர் ராஜா வயது 45 என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு 84% தீக்காயங்களுடன் அவரை மீட்ட லால்குடி போலீசார் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறை காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  ராஜாவிடம் திருச்சி ஜெஎம்  6 நீதிமன்ற நீதிபதி சிவகுமார் யிடம் ராஜா வாக்குமூலம் அளித்த போதுதான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு விசாரணையின் போது  தன்னை தாக்கிய லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன்,  தனது தம்பி நிர்மல் அவரது மனைவி அவரது மகள் ஆகிய நால்வர் தான் காரணம் என்ன வாக்குமூலம் அளித்துள்ளார்.

உறவினர்களுக்கிடையே உள்ள சொத்து பிரச்சனை தொடர்பாக அடிதடி வழக்கில் சரிவர விசாரணை செய்யாத உதவி ஆய்வாளர் பொற் செழியன் என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்  பரிந்துரையின்  பெயரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர்  பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.


 இதனிடையே சிகிச்சை பெற்று வந்த ராஜா உயிரிழந்ததை தொடர்ந்து மரண வாக்குமூலம் அடிப்படையில் எஸ்ஐ பொற் செழியன் உள்ளிட்ட நால்வர் மீதும் லால்குடி போலீசார் வழக்கு பதிய வாய்ப்பு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது மனைவி விஜயா செய்தியாளர்களிடம் பேசிய பொழுது தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை பொய்யாக புகார் கொடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஜட்டியுடன் அமர வைத்து போலீசார் பூஸ்ட் காலால் உதைத்ததாகவும் அதனை அவரது உறவினர்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 இதனால் அவமானம் தாங்காமல் அவர் லால்குடி காவல் நிலைய வாசலில் தீக்குளித்தார்.மேலும் அவர் ஏற்கனவே தான் இறந்தால் அவரது மாமனார் வீட்டில் வைத்து தனது மகனை புதைத்த இடத்திற்கு அருகில் இறுதி சடங்குகளை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn