ஸ்ரீரங்கம் கோயில் ஆவணத்தை திருட்டுத்தனமாக பெற்று அவதூறு பரப்பியவர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ்

ஸ்ரீரங்கம் கோயில் ஆவணத்தை திருட்டுத்தனமாக பெற்று அவதூறு பரப்பியவர் மீது கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து ரங்கராஜன் நரசிம்மர் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த மனுவில் ஸ்ரீரங்க ரங்கநாதன் திருக்கோயில் பணியாளர் மாஸ் சீனிவாசன் கோயில் மகாஜனம் என்பவருக்கு பூஜை முறைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட அலுவலக நகல் எண் 44 60 14 32 பி54 நாள் (20.04.2023) கடிதத்தில் மேற்படி

பணியாளரிடமிருந்து தவறான வழியில்  பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசையும் திருக்கோயில் நிர்வாகத்தையும் அரசு அலுவலர்களான தற்போதைய இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து மற்றும் முன்னாள் செயல் அலுவலர் மா. கவிதா மற்றும் ஜெயராமன் ஆகியோர்களையும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் அவர்களையும் திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளரையும் மற்றும் நிர்வாகப் பிரிவு எழுத்தரையும் அவமதிக்கும் நோக்கில் பொய்யான கருத்துக்களையும் அவ மரியாதையாகவும் அவதூராகவும் தரம் இல்லாத சொற்களாலும்  கோப ஆவேசத்துடன் பேசி சமூக வலைதளங்களை சுமார் 25 நிமிட வீடியோ வெளியிட்டு பொது மக்களின் பார்வைக்கு தமிழ்நாடு அரசை பற்றி அவதூறாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.

மேற்படி வீடியோ பதிவில், அத்துமீறும்  மாரிமுத்துவும் அறநிலை துறையும் என தலைப்பிட்டு தரக்குறைவாக விமர்சனம் செய்தது, இந்து சமய அறநிலைத்துறையை கேடுகெட்ட துறை என கீழ்த்தரமாக பேசி வணிக நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்தது, திருக்கோயிலின் அறங்காவலர்களுக்கு எடுபிடி ஆகும் செயல்பட வேண்டியது இணை ஆணையர் செயல் அலுவலர் கடமை என தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

ஸ்ரீரங்கத்தில் இருப்பவன் மாரிமுத்து இவனுக்கு எல்லாம் மரியாதை இனிமேல் கொடுக்கப் போவதில்லை என்று இணை ஆணைய செயல் அலுவலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தது. இவனுக்கு சம்பிரதாய விஷயங்களில் மூக்கை நுழைப்பது தான் வேலை என்று தரக்குறைவாக இணை ஆணையரை விமர்சனம் செய்தது சட்ட விரோதமாக இணை ஆணையர் செயல் அலுவலர் மாரிமுத்து என்பவன் ஒரு கடிதம் அனுப்பி உள்ளான் என்று இணை ஆணையர் செயல் அலுவலர் தரக்குறைவாக  விமர்சனம் செய்தது. என்ன எழுதுகிறான் பாருங்கள் இவன் என்று  தரக்குறைவாக விமர்சனம் செய்தது பூஜை நடைமுறை குறித்து உனக்கு என்ன கவலை என்று விமர்சனம் செய்தது எவ்வளவு திமிர் இருந்தால் எப்படி ஒரு கடிதம் எழுதுவான் என்றும் நீ பார்ப்பது குமாஸ்தா பணி என்றும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது.

உனக்கு என்ன நெஞ்சழுத்தம் என்றும் பூஜையில் தாமதம் என்று கேட்டதற்கு மாரிமுத்து யாருடா என்று விமர்சனம் செய்தது நீ இத்தனை நாளாக இந்த ஊரில் இருக்கிறாய் என்றும் திருக்கோயில் இடத்திலிருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் நீ என்றும் ராமானுஜர் யார் என்று தெரியுமா உனக்கு விபரீதமாய் போய்க்கொண்டிருக்கிறாய் ராமானுஜர் காலத்திய ஆணையை  பூஜையாக செய்து வருவதாகவும், உனக்கு என்ன தெரியும் என  தரக்குறைவாக பேசியது நீ எல்லாம் இதுகுறித்து விளக்கம் கேட்க யார் என சமூக வலைத்தளங்களில் இணை ஆணையர் செயல் அலுவலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தது விஜயரங்க சொக்கநாதர் சிலை பக்கம் போகவிடவில்லை. இந்த திருட்டு பசங்க என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது  சீனிவாசன் என்பவன் கோயிலை நாசம் செய்து விட்டான் என்று தரக்குறைவாக விமர்சனம் செய்தது. செயல் அலுவலர் மாரிமுத்து பதவி பறிக்கப்படும் என்றும் இதற்கு முன் செயல் அலுவலராக இருந்த கவிதா நிலை என்னவென்று உனக்கு தெரியும் என்றும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது. இவ்வாறு சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பியதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உடனடியாக இவ்வாறு பேசியது தவறு என்று குறிப்பிட்டு  மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு இனிமேல் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தும் மேற்படி தவறான வீடியோவை பார்த்த நபர்களை கண்டறிந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விஷயத்தை தெரிவித்து  அதன் விபரத்தை அலுவலகத்திற்குச் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் திருக்கோயில் அலுவலகத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடிதங்களை திருட்டுத்தனமாகவும் தவறான வழியிலும் பெற்று தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்டம் முறைகளின் படிப்பெற்றும் சட்டப்பூர்வ வழிகளில் ஆலோசனைகள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுக் கொள்ளவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. உண்மையான பெருமாள் பக்தர் ஸ்ரீ வைஷ்ணவர் இவ்வாறு தரக்குறைவான சொற்களை பயன்படுத்திய கோப ஆவேஷமாய் பேச மாட்டார் என்றும்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீசை பெற்றுக்கொண்ட ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பதிலளிக்கும் வகையில் மமதையில் மிரட்டல் விடும் ஸ்ரீரங்கம் கோவில் ஈஓ மாரிமுத்து என்கிற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn