திருச்சி மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற (20.09.2023)-ம் தேதியன்று மதியம் 02:00 மணி முதல் (21.09.2023)-ம் தேதி அதிகாலை 06:00 மணி வரை கீழ்கண்டவாறு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. துறையூர், அரியலூர், பெரம்பலுார் மற்றும் கடலூர் மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து சென்னை பைபாஸ்ரோடு வழியாக பழைய ஆகிய பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், கரூர் பைபாஸ் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதுபாலம், MGR சிலை வழியாக மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

2. லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லுர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய கொள்ளிடம் பாலம், டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, JAC கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

3. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்ரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, Y ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண்-6, டிரங்க்ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி ரோடு, JAC கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மீண்டும் இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, Y ரோடு சந்திப்பு, சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, K.T. சந்திப்பு, மேரிஸ் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

4. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர், துவாக்குடி சென்று மீண்டும் பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், மாரீஸ் தியேட்டர் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.

5. கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவேரிப் பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், TVS டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

6. தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனத்தின் ஒட்டுனர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடைபிடித்து திருச்சி மாநகரில் சீரான போக்குவரத்து இயங்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision