திருச்சி மாநகரில் காவல் ஆணையர் தலைமையில் கொடி அணி வகுப்பு
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, விநாயகர் சதுர்த்தி விழா, சிலை கரைப்பு ஊர்வலம் போன்றவற்றில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதியை நிலைநாட்டிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி, திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் வருகின்ற (20.09.2023)-ம் தேதியன்று நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல்துறையினரால் இன்று (18.09.23)-ந் தேதி கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
இதில், அரியமங்கலம் காவல்நிலைய சரகத்தில் நடைபெற்ற கொடி அணி வகுப்பினை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, SIT கல்லூரியிலிருந்து தொடங்கி வைத்து முன்னின்று நடத்தி சென்றார். கொடி அணி வகுப்பானது காமராஜ் நகர் முத்துமாரியம்மன் கோவில், ராஜ வீதியில் உள்ள 22 தெருக்கள், GT நாயுடு தெரு வழியாக தஞ்சை மெயின் ரோட்டிற்கு வந்து ஆயில் மில் செக் போஸ்ட் வழியாக பிரகாஷ் மஹாலில் முடிவுற்றது. இதில் காவல்துணை ஆணையர் (தெற்கு), கூடுதல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, பொன்மலை உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் உட்பட 300 காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும், தொடர்ந்து உறையூர் காவல்நிலைய சரகத்தில் நடைபெற்ற கொடி அணி வகுப்பினை திருச்சி மாநகர காவல் ஆணையர் முன்னின்று நடத்தி சென்றார்கள். இக்கொடி அணி வகுப்பானது, உறையூர் காவல்நிலையத்தில் தொடங்கி, பாண்டமங்கலம் அரசமரத்தடி, பணிக்கன் தெரு, நாடார் தெரு, டாக்கர் ரோடு, நாச்சியார் கோயில் சந்திப்பு வழியாக மீண்டும் உறையூர் காவல்நிலையத்தில் முடிவுற்றது. இதில் காவல்துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, ஸ்ரீரங்கம் மற்றும் தில்லைநகர் சரக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் உட்பட 300 காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும் திருச்சி மாநகரில் எவ்வித இடையூறு இல்லாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற விழா அமைப்பாளர் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே குறிப்பிட்ட வழிதடங்களில் வந்து காவேரியாற்றில் கரைத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision