திருச்சி HPL- ரோலர் ஹாக்கி லீக் போட்டி

திருச்சி HPL- ரோலர் ஹாக்கி லீக் போட்டி

திருச்சி வடுகப்பட்டி பகுதியில் ஹாக்கர்ஸ் கிளப் நடத்தும் ரோலர் ஹாக்கி ப்ரீமியர் லீக் போட்டிகள் இரண்டு நாட்கள்நடைபெறுகிறது. 8 அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. இன்று(30.04.2023) காலை ஆறு போட்டிகளும் மாலை 6 போட்டிகளும் நடைபெறும்.

 

நாளை(01.05.2023) காலை காலிறுதி, அரை இறுதி மாலை இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. சிறுவர்கள் இளைஞர்கள் அனைவரும் கலந்து ரோலர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கின்றனர். மொத்தம் எட்டு அணிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 7 வீரர்கள் பங்கேற்பார்கள். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.5,000 ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்படுகிறது.