கொரோனா தொற்று குறைய ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கும் காவல்துறை

கொரோனா தொற்று குறைய ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கும் காவல்துறை

கொரோனா தொற்று குறைய ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கும் காவல்துறை

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்த 24-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பலரும் வாகனங்களில் காரணமின்றி சுற்றித் திரிகின்றனர்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் பலரும் இயல்பான காலம் போல் இரு சக்கர வாகனம் மற்றும்  கார்களில் வலம் வருவதை காண முடிகிறது. பலமுறை போலீசார் எச்சரித்தும் அதனை காதில் வாங்காமல் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர். இதனையடுத்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் முழுவதும் 55 சோதனைச் சாவடிகளில் 1300   போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகக்கவசம்,  தலைக்கவசம் அணியாமல் சுற்றித் திரியும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமலும் இ-பதிவின்றி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்த வகையில்  அதாவது 24ஆம் தேதி முதல் இன்று வரை முக கவசம் அணியாமல் சென்றதாக 9807 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என 635 வழக்குகளும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 35 கடைகள் மீது வழக்கு என 15,093 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல 3525 இருசக்கர வாகனங்கள், 116 ஆட்டோக்கள், 46 கார்கள் என மொத்தம் 3687 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாளில்  மட்டும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாயும், இன்று காலை 6 மணி வரை 28 லட்சத்து 630 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக  வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் உள்ள பிரதான சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் ஏற்படுத்தி மூடப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் காரணமின்றி வாகனத்தில் சுற்றுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx