கிராமப்புற மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கும் வாய்ஸ் அறக்கட்டளை

கிராமப்புற மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கும் வாய்ஸ் அறக்கட்டளை

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் வீட்டிலே இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் அவர்களிடையே வேளாண் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விடுமுறை வேளாண் பயிற்சி என்ற புது முயற்சியாக கிராமப்புறங்களில் உள்ள வேளாண் பின்னணியைச் சார்ந்த   மாணவ, மாணவிகளுக்கு வீடுகளில் தோட்டம் அமைப்பது பற்றி திருச்சி வாய்ஸ் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 

இந்த முயற்சி குறித்து வாய்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த பிரீத்தி கூறியதாவது.... கொரோனா காலத்தில் வீடுகளில் இருக்கும் கிராமப்புற மாணவர்களிடையே வேளாண் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவர்களுக்கு பிரத்தியேகமாக வகுப்புகள் நடத்தினோம். எவ்வாறு விதைகளை  தேர்ந்தெடுப்பது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறை வீட்டுக் கழிவுநீர் பயன்பாடு இப்படி ஒவ்வொன்றையும் பற்றி 10 வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு சிறந்த தரமான விதைகள், இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறையையும் கற்றுத்தந்தோம்.

இயற்கை உரங்களை அவர்களே தயாரிக்க மண்புழு உரங்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து பாசி போன்ற அசோலாவையும் அவர்களுக்கு அளித்துள்ளோம். பாசி போன்று இருப்பதால் அசோலாவினை ஆடு, மாடுகளுக்கு உணவாக வழங்கலாம். நாங்கள் 5 பேர் கொண்ட குழுவாக இவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தோம். சிறுகனூர், திருப்பத்தூர், சி.ஆர் பாளையம், பொத்தாக்குடி, இருங்கலூர் போன்ற  ஐந்து கிராமங்களில் உள்ள  மாணவர்களுக்கு இதுவரை பயிற்சி அளித்து வருகின்றோம். 

கடந்த ஆண்டு தொடங்கிய 
விடுமுறை வேளான் பயிற்சியின் பயன்களாக ஒரு மாணவி  வீட்டு தோட்டத்தில் வாழை பராமரிப்பிலிருந்து கிடைத்த 127 வாழைக்காயை ரூபாய் 5 விற்று ரூபாய் 635 வருமானம் கிடைத்து. சிறுத்தொகையாயினும் குழந்தைகளின் முயற்சியின் வெற்றியைப்பார்த்து பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போன்று தீபக் என்ற சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறிய இடத்தில் வாழை, அவரைச்செடி, புளிச்ச கீரை செடிகளை கழிவுநீரை பயன்படுத்தி  பராமரித்து உள்ளான். இந்த விடுமுறை வேளாண் பயிற்சி மிக முக்கிய நோக்கமே கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களிடையே வேளாண் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும்.

கல்வியில் அவர்கள் சிறந்ததோர் இடத்தை பிடித்தாலும், வேளாண் மிக முக்கியமானது என்பதை அவர்களுக்கு சிறு வயதில் முதலே அறிந்து கொள்ள வேண்டும் என்பதே முதன்மையான நோக்கத்தோடு தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டும் அதே போன்று கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து வந்தோம். அதிகரித்து வரும் தொற்றுப்பரவலால் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் பிற்காலத்தில் தொடர்ந்து இதை செய்வதற்கு முயற்சிப்போம் என்றும் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC