கழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின் மனதை கவரும் திருச்சி டீ கடை!

கழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின் மனதை கவரும் திருச்சி டீ கடை!

கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு பொதுவாக மக்களுக்கு உணவு மீதான ஒரு பயம் வந்துவிட்டது. எந்த உணவை சாப்பிட்டால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் என தேடும் காலம் வந்துவிட்டது. அந்த வகையில் எத்தனையோ பேர்ச்சுலருக்கு காலை உணவே இந்த டீ தான். பல பேருக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டரே `டீ' தான்.

Advertisement

தினமும் நாம் இவ்வளவு டீ குடிக்கிறமே இதனால் எதுவும் பிரச்சனை வந்துவிடாதா என்று என்றாவது ஒருநாள் நாம் எண்ணியிருப்போம். ஆனா நாம் தினமும் குடிக்கிற பால் மற்றும் சர்க்கரை கலந்த டீ உடலுக்கு தீங்கு தான் என்று சில ஆய்வு சொல்லுகிறது‌‌. இந்த டீ பிரியர்களுக்காக திருச்சியில் முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட ஆரோக்கியமான, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, மருத்துவ பொருட்களை கொண்டு தயாரித்து வரும் டீக்கடை பற்றிய தொகுப்பு தான் இது.

திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம் ரோடு சாலையில் அமைந்துள்ளது இந்த அதிரச டீ கடை. திருச்சியின் ஏராளமான டீ பிரியர்கள் இந்த கடையை சூழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். என்னப்பா, நடக்கிறது இங்கே, என நேரடியாக சென்றோம்... "அண்ணே ஒரு கழுத்து பால், அண்ணே ஒரு பவர் பால்" என வாடிக்கையாளர்கள் தெரிவித்த போது சற்று வியாபாக இருந்தது. 

கழுதை பால் கேட்டிருக்கோம் இது என்ன கழுத்து பால் என கடையின் உரிமையாளர் வசந்த குமாரிடம் கேட்ட போது கழுத்து பால் ஒன்றை போட்டுக் கொடுத்து விட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.... சுமார் 15 வகையான பொருள்கள் சேர்க்கப்பட்ட கழுத்து பாலின் சுவை ஒருபுறமும், அவர் சொன்ன விஷயம் ஒரு புறம் இரண்டுமாக வியப்படையச் செய்தது. "கொரோனா காலகட்டத்தில் இந்த கடையை ஆரம்பித்தோம். 4 மாதம் ஆன நிலையில் பல வாடிக்கையாளர்கள் தினமும் வந்து டீ அருந்தி செல்கின்றனர். எப்போதும் இருக்கும் டீ கடைகளுக்கு மத்தியில் வித்தியாசமாக நாங்கள் இந்த கடையை ‌பொதுமக்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் 15 வகையான மூலிகை மற்றும் மருத்துவ பொருட்களை பாலோடு சேர்த்து கொடுக்கிறோம். இதில் கழுத்து பால், பவர் பால், இரவு பால் மற்றும் பெண்களுக்கென்று குங்குமப்பூ பால் என வித்தியாசமான முறையில் வெறும் பத்து ரூபாய்க்கு வழங்கி வருகிறோம்.

Advertisement

கழுத்து பால் என்பது உடல்நலத்திற்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் நாங்கள் தயாரித்து வருகிறோம். இதில் திப்பிலி, கருஞ் சீரகம், அதிமதுரம், உலர் பேரீச்சை, சுக்கு, அரத்தை, பால் மிளகு ஜாதிக்காய், மோடி, கருக்காய், வால்மிளகு, பனங்கல்கண்டு, பேரிச்சம்பழம் ஆகிய பொருள்களை பாலோடு சேர்த்து கொடுத்தால் அதன் சுவை நீங்கள் சாப்பிடுகிறீர்களே அது போல தான் இருக்கும்" என்றார்.

திருச்சியில் வெறும் பத்து ரூபாய்க்கு ஆரோக்கியமான பாலை வழங்கும் டீ கடையின் பாலின் சுவை மெய் மறக்கும் அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருந்தது. திருச்சி மக்களாகிய நீங்களும் இந்த டீ கடையில் சென்று சுவைத்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். இறுதியாக எங்களின் டீக்கடையில் டேஸ்ட் பிடித்திருந்தால் அந்த ஹாரன் அல்லது மணியை அடித்து செல்லலாம் என்றும் கூறுகின்றனர் ஊழியர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO