திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்!

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்!

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதிகளில் சட்ட விரோதமாக கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பூனாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வடமலை, ராமன், பாஸ்கர், திருவேங்கடம், அய்யம்பாளையம் கிராமத்தைச்  சேர்ந்த சிவசங்கரன்,மண்ணச்சநல்லூர்ரைச்ச் சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

Advertisement

அவர்களிடமிருந்து ரூ.2500 ரொக்கம், 5 செல்போன்,இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.