திருச்சியில் தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு - 29 கோடி நிதி அனுமதி.

திருச்சியில் தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு - 29 கோடி நிதி அனுமதி.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 29 கோடி ரூபாயை, மாநில அரசு அனுமதித்துள்ளது. வடிகால் வசதியுடன் கூடிய புதிய சாலைகளை அமைப்பது, நீர் தேவையை பூர்த்தி செய்வது உட்பட பல்வேறு தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இதன் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. 

மணப்பாறையில் உள்ள 1,096 ஏக்கரில் ஒரு பகுதி மட்டுமே முதலில் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டதாக சிப்காட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எலக்ட்ரானிக் உற்பத்தி சேவை வழங்குநரும், ஆப்பிள் சப்ளையருமான ஜபில் தன்னுடைய முதலீடு குறித்து தெரிவித்ததிலிருந்து, மணப்பாறை சிப்காட் மற்றும் அதன் பிரத்யேக உணவுப் பூங்கா மீதான ஆர்வம் உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்துள்ளது.

மேலும் பொறியியல் மற்றும் ரசாயன நிறுவனங்களிடம் இருந்து மணப்பாறை சிப்காட் நிறுவனத்திற்கு விசாரணைகள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெரம்பலூர் சிப்காட்டில் உள்ள தோல் அல்லாத காலனி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை கணக்கில் கொண்டு திருச்சியிலிருந்து பெரம்பலூர் வழியில் உள்ள பாடலூரில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் உருவாக்கும் திட்டங்களும் உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள 29 கோடி ரூபாயில் தொழில்துறையில் இரண்டாம்கட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision