நஷ்ட ஈடு வழங்க கோரி அழுகிய பயிர்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

நஷ்ட ஈடு வழங்க கோரி அழுகிய பயிர்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே அழுகிப்போன பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட குழு அமைத்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உர தட்டுப்பாட்டை போக்க கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனை செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகளின் ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே சென்று அழுகிப்போன நெற்பயிர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் விவசாயிகளிடம் நெற்பயிர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தினார். இதற்கு விவசாயிகள் மறுத்ததால் விவசாயிகளுக்கும் காவல்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn