திருச்சி ரயில் நிலையத்தில் 36 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!!

திருச்சி ரயில் நிலையத்தில் 36 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!!

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், அரவிந்த் ஆகிய இருவரும் திருச்சியிலிருந்து ஹவுராக்கு ரயில் மூலம் பயணம் மேற்கொள்ள திருச்சி ஜங்ஷனுக்கு நேற்று வந்தனர்.

Advertisement

ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இளையராஜா அவர்களின் உடமைகளை சோதனை செய்தார். அப்போது உடமைகளில் சந்தேகம் இருப்பதை அடுத்து சோதனை செய்த போது வெள்ளிக் கொலுசுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிகளிடம் இருந்து 57 கிலோ 372 கிராம் எடையுள்ள ரூ36 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.

பின்பு வணிகவரித் துறைக்கு தகவல் கொடுத்து முறையாக ஆவணங்கள் இல்லாமல் வெள்ளிக் கொலுசுகளை கடத்தியதால் அதற்கான அபாரதத்தை 2,12, 470 ரூபாய் செலுத்தி மீண்டும் உரிமையாளரிடம் வெள்ளிக் கொலுசுகளை ஒப்படைத்தனர்.

Advertisement