திருச்சி நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

திருச்சி நகரின் முக்கிய கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க  திருச்சி கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகைக்கு துணிகள் மற்றும் பொருட்கள் வாங்க முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள என்.எஸ்.பி. சாலை, சின்னக்கடை வீதி, பெரியக்கடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடைவீதிக்குள் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்காமல் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பண்டிகை காலங்களில்  கூட்ட நெரிசலில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் மாநகர போலீசார் பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு,சின்னக் கடைவீதி, கல்லூரி சாலை, மேலப்புலிவார்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். தெப்பக்குளம் அருகில் வழக்கமாக அமைக்கப்படும் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு  காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn