ஸ்ரீரங்கத்தில் தொடரும் கொள்ளை - முனிஸ்வரனுக்கு சிறப்பு பூஜை செய்த காவல்துறையினர்!
Advertisement
திருச்சியில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரங்கம் பகுதியில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தின் மைய இடமாக மாறியுள்ளது. பல தொடர் கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி போன்ற குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதால் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையமே கலக்கத்தில் இருந்தது.
Advertisement
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் புதுத்தெருவை சேர்ந்தவர் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டு வாடகை வசூல் செய்வது போல் உள்ளே புகுந்து கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி வாயை பொத்தி அவர் போட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளையும் 45 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா. ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றபோது அங்கு வந்த இரண்டு பெண்கள் போலி தங்க நாணயங்களை கையில் கொடுத்து மூளைசலவை செய்து சமயம் பார்த்து அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
Advertisement
இதுபோல தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதால் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் உள்ள முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் நடத்தினர்.
பூஜைகளுக்கு பிறகு மூளைச் சலவை செய்து சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு பெண் கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீரங்கம் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய