"தடுப்பூசி செலுத்தியவர் முககவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - திருச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!!
நாளை மறுநாள் 16ஆம் தேதி கோவிட் தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் கோவிட் தடுப்பூசி முதல்முறையாக செலுத்தும் நிறுவனத்தின் ஊசியை தான் மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை தடுப்பூசி செலுத்துவதால் ஏற்கனவே தமிழக அரசு இலவசமாக போடப்படும் என தமிழக முதல்வரின் கொள்கை சார்ந்த முடிவை கடைப்பிடிப்போம் என்றார்.
Advertisement
மேலும் தடுப்பூசி போடும் பணி துவங்கி விட்டது, தடுப்பூசியும் போட்டுக் கொண்டுவர்களும் உடனே முககவசம் அணியாமல் இருப்பது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் தவறு என்றும் குறிப்பிட்டார் .
இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் வரை முதல் முறை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர் முறையான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது. ஆனால் தொடர்ந்து பொதுமக்கள் முககவசம் அவது,தனிமனித இடைவெளி கடைபிடிக்ககாத நிலை உள்ளது. மற்ற நாடுகளில் மீண்டும் கோவிட் அலை வீசுவது பொதுமக்களின் அலட்சியதால் தான். முன்கள பணியாளர்களில் தன்விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
Advertisement
பொதுமக்களுக்கான தடுப்பூசி எப்போது மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி போடபடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் மையத்தின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தார்கள்.