திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குள் விவசாயிகள், போலீசார் தள்ளுமுள்ளு

திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குள்  விவசாயிகள், போலீசார் தள்ளுமுள்ளு

 திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குள் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு குண்டுகட்டாக தூக்கி கைது

உர விலை உயர்வு, தொடரும் மின் வெட்டை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் தொடரும் மின்வெட்டை கண்டித்து இந்த தர்ணா போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்போராட்டத்தை கைவிட வலியுறுத்திய போலீசாருக்கும் விவசாயிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.மின்வெட்டை கண்டித்தும், உர விலையை குறைக்க வலியுறுத்தி போராடிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வேனில் தூக்கிச்சென்று போலீஸ் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO