சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் இன்று (06.05.2022)திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி,திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்(தெற்கு) அவர்களின் அறிவுறுத்தலின் படியும்மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் போதை பொருள் தடுப்பு, கள்ளச்சாராயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கினார்.
மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சிந்துநதி திருச்சி மாநகர பகுதிகளில் கள்ளசாராயம் , எரிசாராயம், போலி மதுபானம், சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் ஆகியோர் இருப்பின் மதுவிலக்கு பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 தகவல் தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வு வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு,போதைப் பொருளினால் குழந்தைகளின் கல்வி, எதிர்கால பாதிப்பு குறித்தும் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் யாரேனும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தாலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் இருப்பின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்குமாறு விழிப்புணர்வு வழங்கினார்.
தலைமை காவலர் பிரபு, உச்சினிமாகாளி, செல்வம், பள்ளி ஆசிரியர்கள் உமா, லில்லி, உஷாராணி ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாநகர காவல்துறை மூலம் நோட்டு புத்தகம் , துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய..