வெள்ள அபாய எச்சரிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெள்ள அபாய எச்சரிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று (15.07.2022) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக 
இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் 
தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” ( Selfie ) எடுக்க அனுமதி இல்லை. என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO