காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மீண்டும் வைக்கப்பட்ட கக்கனின் உருவப்படம்
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமானஅருணாச்சலம் மன்ற வாயிலில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 17- 4 -22 அன்று மன்றத்தில் தியாகி கக்கன் போட்டோ திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்து நாங்கள் சென்ற பின்னர் தியாகி கக்கன் போட்டோவை மாவட்டத் தலைவர் ஜவஹர் தூக்கி எறிந்து விட்டார்.
காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அவரது படத்தை அலுவலகத்தில் வைக்க வேண்டும் இல்லை என்றால் தாங்கள் வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (04-05-22) மீண்டும் தியாகி கக்கனின் முழு உருவப் படத்தினை இன்று காலை 10 மணிக்குள் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் படத்தை வைக்க வேண்டும் இல்லை என்றால் உண்ணாவிரதம் என்று மாவட்ட கமிட்டிக்கு அறிவித்திருந்தனர்.
தொண்டர்களின்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி மாநிலத் துணைத் தலைவர் அன்பு அண்ணன் ஆர் ராஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கமிட்டியில் படத்தை வைத்துள்ளனர் மிக்க நன்றி தியாகி கக்கன்ஜி படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் மலைக்கோட்டை முரளி, குமார் ஜி எம் ஜி மகேந்திரன்,
கீர கொள்ளை சக்கரபாணி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ஒன்றிய கவுன்சிலர் நாச்சிகுறிச்சி அருண்பிரசாத் ஆனந்தி எஸ்சி எஸ்டிபிரிவு மாவட்ட செயலாளர் வினோத் குமார் மாவட்ட செயலாளர் ஜீவா நகர் மாரிமுத்து கலைப்பிரிவு ஸ்ரீ ராகவேந்திரா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரபிக் மகளிர் அணி அஞ்சு பிரியங்கா காந்தி பட்டேல் வார்டு தலைவர் வெல்லமண்டி பாலசுப்பிரமணியன் சம்சுதீன் ராஜீவ் காந்தி அதவத்தூர் வேலாயுதம் முகிலன் அரியாவூர் பால் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தொண்டர்கள் மத்தியில் மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் பேசும்போது தியாகி கக்கன்ஜி அவர்களின் படத்தை அகற்றிய மாவட்ட தலைவர் ஜவகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO