மாணவர் மரணத்திற்கு நீதி கேட்டு ஏபிவிபி ஆர்ப்பாட்டம்

மாணவர் மரணத்திற்கு நீதி கேட்டு ஏபிவிபி ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூக்கோடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வந்த சித்தார்த் என்ற மாணவரை ராகிங் என்ற பெயரில் SFI என்ற மாணவர் விரோத அமைப்பை சேர்ந்த சில சமூக விரோதிகள் பல்வேறு சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவரை நிர்வாணப்படுத்தி பல்வேறு ஆயுதம் கொண்டு தாக்கி கொடுமைப்படுத்தி, துன்புறுத்தி உள்ளனர்.

இது பற்றி தெரிந்தும் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், அவமானம் தாங்காது சித்தார்த் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டது அந்த கல்லூரியின் SFI செயலாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் என தெரியவந்துள்ளது. இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு கேரள கம்யூனிச அரசாங்கம் உரிய நடவைக்கை எடுக்குமா? என்று ABVP சந்தேகிக்கிறது.

எனவே, இந்த வழக்கை CBI வசம் ஒப்படைத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும், மாணவர் அமைப்பு என்ற பெயரில் மாணவர்களுக்கு விரோதமாக மாணவர் சித்தார்த் மரணத்திற்கு காரணமான SFI அமைப்பை தடை செய்ய வேண்டியும், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்திட வேண்டியும் திருச்சி ABVP சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision