திருச்சியை சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று - சென்னையில் சிகிச்சை

திருச்சியை சேர்ந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று - சென்னையில் சிகிச்சை

ஒமிக்ரான் தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து திருச்சி விமான நிலையம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வருபவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் அதிக ஆபத்து உடைய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கோவிட் பரிசோதனையும், ஒமிக்ரான் பரிசோதனையும் நடத்தி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஒருவர் தான்சானியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. அதனையடுத்து அவருடைய மாதிரிகள் மேலும் ஒமிக்ரான் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிலும் தொற்று உறுதியானது. 10 நாட்களாக கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளார்.

திருச்சிக்கு  ஒமிக்ரான் வந்துவிட்டதா என்பதை காட்டிலும் திருச்சியை சேர்ந்த ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்றால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் தொற்று உடைய திருச்சியை சேர்ந்த முதல் நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn