திருச்சியில் புற்றுநோயை கண்டறிய அதிநவீன நடமாடும் வாகனம் - புற்றுநோய் பரிசோதனை முகாம்

திருச்சியில் புற்றுநோயை கண்டறிய அதிநவீன நடமாடும் வாகனம் - புற்றுநோய் பரிசோதனை முகாம்

புற்றுநோயை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தின் பயன்பாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement

திருச்சி கே.எம்.சி சிறப்பு மருத்துவமனை மற்றும் கரூர் ஷோபிகா இன்பெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஜப்பான் மற்றும் பிரேசில் ரோட்டரி சங்கங்கள் இந்த வாகனத்தினை வழங்கியுள்ளனர்.

புற்றுநோயை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தின் பயன்பாட்டை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார். இதில் உலகம் முழுவதும் உள்ள பல ரோட்டரி சங்கங்களின் உதவியுடன் சுமார் 1.40 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் கண்டறியும் வாகனத்தை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளனர். 

Advertisement

இந்த நடமாடும் வாகனம் கிராம, நகர்புற பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த அனைத்து வித சோதனைகளையும் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. வாகனத்தில் உள்ள வசதிகள், கருவிகளின் பயன்பாட்டை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டார். பின்னர் திருச்சி ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர் கோபாலகிருஷ்ணன் (ரோட்டரி மாவட்டம் 3000), திருச்சி கே.எம்.சி நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், காவிரி மருத்துவமனை இயக்குனர் அன்புசெழியன், காவிரி மருத்துவமனை கதிரியக்க துறைத்தலைவர் செந்தில்வேல் முருகன், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி,‌ குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் வேதரத்தினம் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், ஊர்க்காவல் படையினர், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர் 

Advertisement

Advertisement