திருச்சி விமான நிலையத்தில் 35 இலட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 4 பேரிடம் விசாரணை!!

திருச்சி விமான நிலையத்தில் 35 இலட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 4 பேரிடம் விசாரணை!!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல்.4 பேரிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. 

Advertisement

இந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த அருண்பாண்டி என்பவரிடம் ரூபாய் 8, 01,850 மதிப்பிலான 158 கிராம் தங்கமும் இதே விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவரிடம் இருந்து ரூபாய் 9,54,100 மதிப்பிலான 188 கிராம் தங்கமும் பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் 32 என்பவரிடமிருந்து ரூபாய் 8, 12,000 மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். 

Advertisement

இவை தவிர சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த நாகராஜ் அவரிடமிருந்து ரூபாய் 9,41,545 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 35, 09,495 மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.