கருப்பு சிவப்பா, காவியா பார்த்துவிடலாம் - திருச்சியில் திமுக எம்பி ராசா சவால்
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திமுக துணை பொதுச்செயலாளர் ராசா.... ஹிந்தி திணிப்பு என்ற பெயரில் இந்துத்துவாவை கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது. தமிழர்களின் பண்பாட்டை நசுக்கவும் ஒழிக்கவும் இதனை செய்கிறது.
உங்களின் (பாஜக) பண்பாடு வேறு மொழி வேறு. பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வர பாஜக தீவிரம் காட்டுகிறது. மதம் ஜாதி மனிதனை பிரிக்கும், மொழி சேர்க்கும் என்றார். 2024ல் கருப்பு சிவப்பா ,காவியா என்று பார்த்து விடலாமா. மம்தா வந்து பார்த்து விட்டு சென்று விட்டாரே என குறிப்பிட்டார். இந்தி,சமஸ்கிருதத்தை கொண்டு வர விடமாட்டோம். தொடர்ந்து திணிக்க முயற்சி செய்தால் உதை விழும்.
கருணாநிதி காலத்தில் பாஜகவுடன் கை கோர்த்தது குறைந்தபட்ச செயல் திட்டம் தால் தான் .அந்த மூன்று செயல் திட்டங்களையும் கடைப்பிடித்ததால் வாஜ்பாய்வுடன் கொள்கை உடன்பாட்டில் கூட்டணி வைத்தோம். பாரதிய ஜனதா திமுகவை பார்த்து பயப்படுகிறது. இப்போது நாடாளுமன்றத்திலும் பயப்படுகிறது. அமித்ஷாவும், மோடியும் ஒரே மொழி என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அழிக்க பார்க்கிறார்கள். அப்படி இருந்தால் இந்தியா சீர்குலையும் என பேசினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO