வைகுண்ட ஏகாதசி விழாவில் ஶ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு அனுமதிப்பது குறித்து மாநகர காவல் ஆணையர் பேட்டி
திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்கியது. இந்நிலையில் ஶ்ரீரங்கம் கோவிலுனுள் தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்... ஸ்ரீரங்கம் கோவில் உட்புறத்தில் உள்ள பகுதிகளில் 117 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று கோயிலின் வெளிப்புறப் பகுதியில் சுற்றி 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அனைத்துமே தற்காலிக காவல் நிலையத்தில் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கான காவல் உதவி மையம் 70 இடத்தில் அமைத்துள்ளோம். கோவிலுக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைத்துள்ளோம். பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக 32 இடங்களில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. 14 இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 17 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் கொரோனா தொற்று விதிமுறையை பின்பற்றி தனிமனித இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்ய வர வேண்டும். செர்க்கவால் திறப்பு அன்று பக்தர்கள் அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். பக்தர்களை தேங்கவிடாமல் பகல்பத்து, ராப்பத்து விழாவிற்கு அனுமதித்து உள்ளோம். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn