திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் தொடங்கியது
108 வைணத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
(04.12.21) இன்று பகல்பத்து பகல் பத்து முதல் நாள் திருநாள் துவங்கியது. காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 8.15 மணிக்கு அர்ஜுன மண்டபத்தை சேர்ந்தார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து ராப்பத்து என 20 நாட்கள் இப்பெருவிழா நடைபெறும்.
முக்கிய திருவிழாவான இராப்பத்து உற்சவத்தின் வைகுண்ட ஏகாதசி வருகிற (14.12.2021) அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.அதிகாலை 3.45 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளிமாலை அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு கடந்து செல்வார். (24.12.2021) வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவுடன் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். நம்பெருமாள் புறப்பாட்டின் போது பக்தர்கள் ஒரே இடத்தில் தேங்காமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது ஸ்ரீரங்கம் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இப்பெருவிழாவிற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn