தீப்பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்த அமைச்சர்

தீப்பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்த அமைச்சர்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு, மணப்பாறை ஒன்றியம் சித்தாநத்தம் கிராமத்தில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்து இன்றைய பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, திருச்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட மதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி,

மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ் உள்ளிட்ட மதிமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision