திருச்சி மக்கள் 15 பேர் மீது வழக்கு, அபராதம் - வன ஊழியர் பணியிட மாற்றம் - மற்றொருவர் பணியிட மாறுதல்.

திருச்சி மக்கள் 15 பேர் மீது வழக்கு, அபராதம் - வன ஊழியர் பணியிட மாற்றம் - மற்றொருவர் பணியிட மாறுதல்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது சூக்லாம்பட்டி கிராமம். இங்கிருந்து வனப்பகுதி வழியாக கொல்லிமலையின் மேல்பகுதியிலிருக்கும், பள்ளிக்காட்டுப்பட்டிக்கு நடந்து செல்வதற்கான ஒற்றையடி பாதை உள்ளது.

சுக்லாம் பட்டிக்கு செல்லும் பாதையை மலைவாழ் மக்கள் தங்களது விலை பொருள்களை சந்தைப்படுத்துவும், விவசாயத்திற்கான இடுப்பொருட்களை மேலே கொண்டு செல்வதற்கு ஏற்ப சாலையை சற்று அகலப்படுத்திய தர வேண்டுமென நாமக்கல் மாவட்ட வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பெயரில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை மட்டும் அகற்றி இருக்கும் பாதையை ஐந்து அடிக்கு மிகாமலும், மரங்களை சேதப்படுத்தாமலும் சீரமைக்க வாய்மொழி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பள்ளிக்காட்டுப்பட்டி மற்றும் சுக்கலாம்பட்டி பொதுமக்கள் இணைந்து காப்பு காட்டுப் பகுதியில் முறையான அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து 1 கிலோமீட்டர் விரிவுபடுத்தி பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், வனத்தில் உள்ள மரங்களையும், காப்புக்காட்டையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நாமக்கல் மாவட்ட வன அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்ததையெடுத்து,

பள்ளிக்காட்டுப்பட்டியை சேர்ந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்து ரூபாய் 3 லட்சம் அபராதமும், சூக்லாம்பட்டியை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூபாய் 40,000 அபராதமும் விதித்துள்ளார். மேலும் இந்த வழக்கில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட வன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், வன சரகர் ஒருவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision