இந்த பங்குகளை அதிகமாக வாங்குகின்றனர், நீங்களும் ஒரு கண்ணை வையுங்கள்.

இந்த பங்குகளை அதிகமாக வாங்குகின்றனர், நீங்களும் ஒரு கண்ணை வையுங்கள்.

நேற்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் BSE சென்செக்ஸ் 536 புள்ளிகள் அதாவது 0.75 சதவிகிதமும் நிஃப்டி 148 புள்ளிகளும் அதாவது 0.69 சதவிகிதமும் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. இந்நிலையில் துறை சார்ந்த முன்னணியில், தொடக்கத்திற்கு முந்தைய அமர்வில், உலோகங்கள் 0.14 சதவீதம் சரிந்தன, சக்தி 1.28 அதிகரித்தது மற்றும் ஆட்டோ 0.16 சதவீதம் உயர்ந்தது.

இதற்கிடையில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை இன்று பிஎஸ்இ-யின் தொடக்கத்திற்கு முந்தைய அமர்வில் முதலிடம் பிடித்தன. வர்த்தகத்தின் இறுதியில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், 11.37 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1183.20க்கு வர்த்தகமானது. அதேபோல அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் 9.83 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1099.30க்கு வர்த்தகமானது.

அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரிய தொடர் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளதால், அதானி குழுமத்தின் பங்குகள் ஆரம்ப அமர்வுக்கு முந்தைய அமர்வில் கவனம் செலுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

இந்த பட்டியலில் மற்றொரு நிறுவனமான விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வர்த்தகத்தின் தொடக்கத்தில் 6.02 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு ரூபாய் 4324.00க்கு வர்த்தகம் செய்தது. செவ்வாயன்று, முன்னணி முதலீட்டாளர் ராதாகிஷன் தமானி மொத்த ஒப்பந்தங்கள் மூலம் VST இண்டஸ்ட்ரீஸில் தனது பங்குகளை அதிகரித்தார் என்பதால் பொதுமக்களும் வாங்க தொடங்கினர் பிஎஸ்இ மொத்த ஒப்பந்தத் தரவுகளின்படி, தமானி விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸின் 2.22 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை ஒரு பங்கிற்கு சராசரியாக ரூபாய் 3,390 விலையில் வாங்கியுள்ளது தெரியவந்தது.

இதன் மூலம் நிறுவனத்தில் 1.44 சதவிகித பங்குகளை தன்னகப்படுத்தினார் . இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் சந்தை போக்கிற்கு இணங்க வி.எஸ்.டி பங்குகள் 0.63 சதவிகிதம் குறைந்து ரூபாய் 4,034.60 என வர்த்தகத்தை முடித்தது.

(Disclimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனை அல்ல.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision