பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாநகர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் அந்த பள்ளியின் தாளாளராகவும், தலைமை ஆசிரியராகவும் ஜேம்ஸ் உள்ளார். அந்த பள்ளின் வளாகத்திற்குள்ளேயே மாணவ, மாணவியர்களுக்கான விடுதி செயல்படுகிறது. அந்த விடுதியில் தங்கி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவரிடம் ஜேம்ஸ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அந்த மாணவி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உறையூர் காவல் நிலையத்தில் வைத்து ஜேம்ஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணைக்கு பின் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  பள்ளி தாளாளர் ஜேம்ஸ் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை பள்ளிக்கல்வித்துறை இவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையும், விடுதி வார்டனும்,  ஜேம்ஸ் மனைவியுமான ஸ்டெல்லா மேரி குற்றத்தை மூடி மறைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn