பணம் தகராறு – திருச்சியில் 15 வயது சிறுவன் வெட்டி கொலை

பணம் தகராறு – திருச்சியில் 15 வயது சிறுவன் வெட்டி கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் திங்கட்கிழமை இரவு 15 வயது சிறுவன் அரிவாளால் வெட்டு

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி அடுத்த செட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(40). இவர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் இருந்ததில் இருத்தரப்பினருக்கும் பகை இருந்துள்ளதாம். ராமலிங்கம் குடும்பத்தினரிடம், வெள்ளையம்மாள் ஆண் நண்பரான பச்சமுத்து பணத்தை திரும்ப கொடுக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், இதுகுறித்து ராமலிங்கம் போலீஸில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை பால்கொள்முதல் நிலையத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்ற ராமலிங்கத்தின் இளைய மகனான 15 வயது சிறுவனிடம் வெள்ளையமாள் – பச்சமுத்து ஆகியோர் இருச்சக்கர வாகனத்தை பறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராமலிங்கம் திங்கட்கிழமை இரவு தனது இரு மகன்களுடன் சென்று இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போது இருத்தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் பச்சைமுத்து ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து ராமலிங்கத்தை வெட்ட வந்ததாகவும், அப்போது 15 வயது சிறுவனின் தலையில் அரிவாள் வெட்டுப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், ராமலிங்கம் குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கட்டையால் தாக்கியதாக பச்சமுத்துவும் தலையில் வெட்டு காயத்துடன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில், பள்ளி மாணவன் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி பள்ளி மாணவர்கள் கஞ்சநாயக்கன் பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO