முசிறியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயக் கருத்தரங்கு.

முசிறியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயக் கருத்தரங்கு.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு இன்று பிறந்தநாள் முன்னிட்டு  நமது கிராமம் நஞ்சில்லா விவசாயம் என்ற தலைப்பில் இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் ஒன்றியகுழு தலைவர் மாலா ராமச்சந்திரன் இயற்கை ஆர்வலர்கள் தாமோதரன், சிவராமன், புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் இயற்கை விவசாயம் குறித்து விரிவாக பேசினர்.

கருத்தரங்கில் பாரம்பரிய நெல் மற்றும் தானிய விதைகள் கண்காட்சி பொருத்தப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கு ஏற்பாடுகளை பசுமை சிகரம் யோகநாதன், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாய கருத்தரங்கின் போது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி
விவசாயிகளுக்கு துணி பை வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO