காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் - 102 நபர்கள் அடையாளம் காணப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் இன்று (01.09.2024)-ந் தேதி திருச்சி மாநகரில் உள்ள 6 காவல் சரகங்களில் காணமால் போனவர்களை அடையாளம் காண்பதற்கு சிறப்பு முகாம் (Missing Cases Mega Mela) சரகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் கலந்து கொண்ட மனுதாரர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்துக்கொண்டும், திருச்சி மாநகரம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாத நபர்களின் இறப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இறந்து போன நபர்களின் புகைப்படங்களை திரையில் காண்பிக்கபட்டது.
இத்திரையில் காண்பித்ததை அவரது உறவினர்கள் புகைப்படத்தை ஒப்பிட்டும், அங்கமச்ச அடையாளங்களை சொல்லியும் ஒப்பிட்டு பார்த்ததில் மொத்தம் 329 வழக்குகளில், 102 நபர் காணாமல் போனவர்களில் அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் இதுபோன்று திருச்சி மாநகரில் காணாமல் போனவர்களின் அடையாளங்களை மற்ற மாவட்டகளில் உள்ள வழக்குகளில் ஒப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ளபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision