உழைப்பாளர் சிலை போல் நின்ற பள்ளி மாணவர்கள்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஈ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஆசிரியர் பார்த்திபனின் இல்லத்தின் மாடியில் ஆசிரியர் பார்த்திபன் அவர்களிடம் படிக்கக்கூடிய மாணவர்கள் அவரது உதவியுடன் உழைப்பாளர் தினமான இன்று அவர்களின் உழைப்பை போற்றும் வகையில் அவர்களின் உழைப்பை கௌரவப்படுத்தும் வகையில் உழைப்பாளர் சிலை போல் மாணவர்கள் நின்றனர்.
இதைப் பற்றி விலங்கியல் ஆசிரியர் பார்த்திபன் கூறுகையில் உழைப்பாளர்களால் தான் இந்த தேசம் வலிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் ஆனால் உழைப்பாளர் சிலைக்கு தனி சிறப்பு உள்ளது. உழைக்காமல் வாழும் தலைமுறையாக இந்த தலைமுறை மாறி வருகிறது. அவர்களுக்கு உழைப்பின் அருமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவே உழைப்பாளர் சிலை போல் பள்ளி மாணவர்கள் நின்றனர் என கூறினார் ..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision