பிறப்பு பதிவேடுகளில் விடுப்பட்டுள்ள குழந்தை பெயர் பதிவு செய்ய கால நீட்டிப்பு - திருச்சி ஆட்சியர் தகவல்

பிறப்பு பதிவேடுகளில் விடுப்பட்டுள்ள குழந்தை பெயர் பதிவு செய்ய கால நீட்டிப்பு - திருச்சி ஆட்சியர் தகவல்

பிறப்பு சான்றானது குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை எற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற. பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாததாகும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு. இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி 01.01.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டது. 

பின்னர் மேலும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசாண பிறப்பிக்கப்பட்டது. 31.12.2019 வரையிலான கால் அவகாசம் முடிவுற்ற நிலையில் விடுப்பட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் யெர் பதிவு செய்திட 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனை. ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி, கண்டோன்மென்ட், பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் பிறப்பு பதிவேடுகளில் விடுப்பட்டுள்ள குழந்தை பெயரை பதிவு செய்ய மக்கள் விண்ணப்பித்துப் பயனடைந்திடலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn