சாலையோரத்தில் கொட்டி கிடந்த ஆதார் அட்டைகள்

சாலையோரத்தில் கொட்டி கிடந்த ஆதார் அட்டைகள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கிராமத்தில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக சாலையில் கொட்டிக்கிடந்தது. ஆதார் கார்டுகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளுரை சேர்ந்ததாக உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆதார் கார்டு விண்ணப்பித்த வர்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் கார்டுகளை சரியாக வீடுகளுக்கு சென்று கொடுக்காமல் தபால் ஊழியர் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதார் கார்டு ஒவ்வொரு இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாகும்.

வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைக்கவில்லை என்றால் மேற்கண்ட சேவைகள் கிடைக்காது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் திருச்சி பூவாளூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் குவியலாக கடந்த ஆதார் அட்டையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision