திருச்சி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (25) இளைஞரான இவர் டாட்டா ஏசி வாகனம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரவீனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்,
தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகூறி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்வதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அழகம்மை உதவி ஆய்வாளர் கவிதா தீவிர விசாரணை செய்து பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆட்டோ டிரைவர் பிரவீனை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision