திருச்சியில் நாளை (21.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (21.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

110/11 கி.வோ வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (21.01.2025) செவ்வாய் கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஜெய் நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், பெல் டவுன்சிப்பில் C மற்றும் B செக்டாரில் ஒரு பகுதி, கிளியூர், தமிழ் நகர், கணபதி நகர், சொக்கலிங்கபுரம், கீழகுமரேசபுரம், இம்மானுவேல் நகர், மேலகுமரேசபுரம், வ.ஊ.சி. நகர், கூத்தைப்பார், எழில் நகர்,

கிருஷ்ணசமுத்திரம், அய்யம்பட்டி, பத்தாளப்பேட்டை, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யபடுகிறது.

110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் நாளை (21.01.2025) செவ்வாய் கிழமை காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இராம்ஜி நகர், கள்ளிக்குடி, அரியாவூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, கரையானிபட்டி,

அம்மாப்பேட்டை, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, பூலாங்குளப்பட்டி சித்தாநத்தம், புதுக்குளம், ஆலம்பட்டியார், இடையப்பட்டி, மேல்பகனூர் ஆகிய பகுதிகளில் நாளை (21.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்குதலும் காத்தலும், திருச்சி பெருநகர்/கிழக்கு/ மன்னார்புரம், செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision