திருச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சியில் துப்பாக்கி சுடும்  பயிற்சி - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், (12.01.2025) ஆம் தேதி முதல் (15.01.2025) ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் Parachute Regiment Training Centre, Bangalore Group Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.

இதனால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision